Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.3000-ஐ தாண்டியது வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்

ரூ.3000-ஐ தாண்டியது வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்

தீபாவளி பண்டிகை நேரத்தில், வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வணிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.11 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியாவில் மாதம் தோறும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.11 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டரின் விலை ரூ. 3,016-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகை நேரத்தில், வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வணிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வால், இனிப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயரக்கூடும் என்பதால் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மாதம் ரூ.66.50 உயர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதமும் 11 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. அதே சமயம், ஆறுதல் அளிக்கும் விதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.957.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முந்தைய செய்தி
செவிலியர் பற்றாக்குறை இனி இருக்காது: அமைச்சர் அருண்ராஜ்
அடுத்த செய்தி
மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்